சினிமாவெள்ளித்திரை

அருண் விஜய் படத்தின் முதல் சிங்கள் ரீலீஸ் தேதி அறிவிப்பு !

முதல் சிங்கள்

யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை அடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சினம். ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்க, ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சினம் திரைப்படத்தின் ‘நெஞ்செல்லாம்’ என்ற முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts