அரசியல்இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் !

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் குலாம் நபி ஆசாத். இவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் தலைமை தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் குலாம் நபி ஆசாத் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts