அரசியல்உலகம்கல்விசமூகம்

சிலி நாட்டில் அடிப்படை தேவையை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் !

சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர்.

மாணவர்கள் போராட்டம் 

சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல் கல்வி, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில், மாணவர் அமைப்பினர் சார்பில் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும்  போராட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லமறுத்ததால், மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். இதனால் சாண்டியாகோ நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts