மருத்துவம்

இயற்கையான வழியில் இதய கோளாறுகளை தடுக்க இதோ சில எளிய குறிப்புகள்!

இதய கோளாறுகளை இயற்கையான வழியில் தடுக்க சில குறிப்புகளை இந்த பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்.

காலையில் ஒரு துண்டு இஞ்சி. தோல் நீக்கி, தண்ணீருடன் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இது உங்கள் இடுப்பில் விழும் மடிப்புச் சதையைப் போக்கும். பித்தம், மயக்கம் வராமல் காக்கும். உடலினுள்ள கொலஸ்ட்டரால் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

healthy heart

பிற்பகல் உணவுக்குப்பின் இரண்டு பச்சைப் பூண்டுப் பல்லை தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்குங்கள்.

தாமரைப்பூ இதழ்களை அலசி தினம் ஒன்று சாப்பிடுங்கள்.

தாமரைப்பூ கிடைக்காதவர்கள் செம்பருத்திப் பூவைச் சாப்பிடுங்கள்.

சிறிய வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

shallots

கொள்ளு ரசம் வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.

வாழைத் தண்டு பொரியல் வாரம் இருமுறை.

வாழைப்பூவை வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.

ஏழுமணிநேரம் கட்டாயம் இரவில் உறங்க வேண்டும். காலை 6 மணி வரைத் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தல்.

இரவு நேரத்தில் பணியாற்றுவோர் பகலில் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.

நல்ல கொழுப்பு தரும் பாதாம், வேர்க்கடலை, முந்திரி பருப்பு சாப்பிடலாம்.

பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், கீரைகள் நாள்தோறும் உண்ண வேண்டும். திராட்சைப் பழத்தை நன்குக் கழுவிச் சாப்பிடவும்.

 

தினம் ஒரு ஸ்பூன் சீரகத்தை மென்று சாப்பிடுங்கள்.

fenugreek

வெந்தயம் (ஊறவைத்து) தினம் ஒரு ஸ்பூன் அளவு மென்று சாப்பிடுங்கள்.

பாகற்காயை வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள்.

‪‎தவிர்க்க‬ வேண்டியவை:

1. பாக்கட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகள்.

2. குளிர்பானங்கள்.

3. மது, புகைப்பிடித்தல்

smoking

4. உணர்ச்சிவசப்படுதல், பரப்பரப்பாய் செய்தல், பதட்டப்படுதல்

5. நினைத்த நேரம் நினைத்ததைச் சாப்பிடுதல்.

6. தூக்கத்தைத் தொலைத்தல்

7. கொழுப்பு நிறைந்த உணவுகள்

deep fried food

8. வறுத்த உணவுகள்.

இவற்றைப் பின்பற்றினால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். முதுமையிலும் வலுவோடும் பொலிவோடும் வாழலாம்.

Related posts