விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வசதி
விழுப்புரம், வானூர் அருகே பொம்பூர் கிராமம் உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. மழை காலங்களில் மருத்துவமனை மேல்கூரை சேதமடைந்து காணப்படுவதால் மருத்துவமனை முழுவதும் மழை நீர் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ள நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை இதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு வந்த போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த கர்ப்பிணி பெண் மரணம் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, பொம்பூர் மருத்துவமனைக்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தை புரணமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

