ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே எடை குறைவாக இருந்ததாக ஆவின் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
குற்றச்சாட்டு
520 கிராம் வரை எடை இருக்க வேண்டிய பால் பாக்கெடின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாக கடந்த வாரம் சென்னையில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு தனியார் நாளிதழ் இது தொடர்பாக தனது செய்தி பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ஆவின் நிறுவனம் அறிக்கை மூலமாக இது குறித்து பதிலளித்துள்ளது.
அறிக்கை
அதில், ‘ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்துள்ளது. அதற்கும் உடனடியாக மாற்று பால் பாக்கெட் கொடுக்கப்பட்டுவிட்டது. இயந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக அளவு குறைந்து இருக்கலாம். மேலும், தரம் மற்றும் அளவுகள் எந்தவித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் 24 மணி நேர சேவை எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்’ என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

