மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன துப்பாக்கி
மதுரை மத்திய சிறை வாசல் அருகே குப்பை தொட்டி உள்ளது. அதில் இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த குப்பை தொட்டியில் சிறிய நவீன துப்பாக்கி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அந்த துப்பாக்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

