Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»உருளைக்கிழங்கு! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

உருளைக்கிழங்கு! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

June 22, 20222 Mins Read33 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Cette photo représente une personne en train d'éplucher une pomme de terre.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இருக்காது. சொலானம் ட்யூபரோசம் (Solanum Tuberosum) என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக்கிழங்கு ஒரு சீரான உருவமே இல்லாமல் அழகற்றதாக இருக்கும். இப்படி இருந்தும் அதனை ஈர்க்கும் பொருட்டு நம் மீது ஏதோ மந்திரத்தை இது தூவியிருக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். ஏனென்றால் வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய ரகசியங்கள் மேலும் உள்ளன.

potatoes

இத்தகைய இரகசியங்கள் என்னவென்று பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளையும் அனைவரும் அறிந்ததாக வேண்டும். அது என்னவென்றால், உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது.

அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் சோலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சரி, இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா?

எடை கூடுதல் :

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

இதையும் படிக்க :  இலங்கை : முன்னாள் அமைச்சர் அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி !
செரிமானம் :

கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.

சரும பாதுகாப்பு :

வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

potato

கீழ்வாதம் :

இங்கு இதை இரண்டு கோணங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது.

அனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். இதுவே கீழ்வாதம் உள்ளவர்களுக்கோ கேடாக போய் முடியவும் வாய்ப்புள்ளது.

அழற்சி/வீக்கம் :

உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் செய்யக்கூடியதாக இருக்கும்.

இதையும் படிக்க :  குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்கள்: என்று தீரும் இவர்களது ரத்த வெறி?

மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சியை சரி செய்யும்.

health benefits of potatoes

வாய் புண் :

வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

மூளை செயல்பாடு :

மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இதய நோய்கள் :

உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.

இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும். இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல.

amino acids bllod sugar brain caratinoid carbohydrates chaconine Diabetes featured food glucose heart problems indigestion inflammation large intestine magnesium memory power minerals potassium potato root vegetable skin care small intestine Solanum tuberosum solonine starch tuber vitamin b6 vitamin c weight gain weight loss
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதான விசாரணை நிறைவு !
Next Article ஓடிடியில் வெளியாகும் ‘விக்ரம்’ ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
உணவு

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.