Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது நல்லதா கெட்டதா ?

காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது நல்லதா கெட்டதா ?

June 20, 20222 Mins Read45 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்காச்சோளத்தில் நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-3, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு கார்ன் ஃப்ளேக்ஸாக மாற்றப்படுகிறது.

இதனால் சத்துகளின் அமைப்பு மாறுவதோடு சத்துகளும் இழக்கப்படுகின்றன. சுவை கிடைக்கவேண்டும் என்பதற்காக சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதில் பல வைட்டமின்கள் செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றன.

மக்காச்சோளம் ஓர் இயற்கை உணவு. ஆனால் கார்ன் ஃப்ளேக்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவு. ஆக, இயற்கையாகக் கிடைக்கும் உணவின் நன்மை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஒரு பொருளில் நிச்சயமாக இருக்காது.

corn flakes

மக்காச்சோளத்தை அப்படியே கொடுத்தால் குழந்தைகளுக்கு அதன் சுவை பிடிக்காது. அதனால் கார்ன் ஃப்ளேக்ஸில் இனிப்புச் சுவை தரும் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.

இதனால் கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் எண்ணின் (Glycemic index) அளவு அதிகமாக உள்ளது. இதன் அளவு அதிகமாகும்போது ரத்தத்தில் மிக வேகமாகச் கலந்துவிடும். அதனால் இதைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுப்பது சரியல்ல.

கார்ன் ஃப்ளேக்ஸில் கலோரியும், சத்துகளும் மிகக் குறைவாகவே உள்ளன.

குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் இல்லை. தினமும் இதை மட்டும் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு எல்லாச் சத்துகளும் நிரம்பிய சரிவிகித உணவு கிடைக்காது.

இதையும் படிக்க :  சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா !

இதனால் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குச் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. மிக விரைவில் மீண்டும் பசி எடுக்கும்.

உடல் எடை குறையுமா ?

கார்ன் ஃப்ளேக்ஸில் சத்துகள் குறைவாக இருப்பதால், வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் உடல்எடை குறையும் என்பது உண்மைதான். ஆனால், இது பட்டினி கிடப்பதற்கு ஒப்பானது.

கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் நமக்குத் தேவையான சத்துகளும் கிடைக்காது, பசியும் அடங்காது. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பசி எடுக்கும். அப்போது நான்கு இட்லி சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்வோம்.

அதன்பிறகு நமது உடல் எடை கண்டிப்பாகக் குறையாது. எனவே கார்ன் ஃப்ளேக்ஸைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.

cereal

கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

இதையும் படிக்க :  மாதுளம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?!

ஆனால் ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடக்கூடாது. கார்ன் ஃப்ளேக்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கலாம்.

இதனால் ஃபேட்டி லிவர் நோய் (Fatty Liver Disease) என்ற நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

செயற்கையாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் எப்போதுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலிருந்து கார்ன் ஃப்ளேக்ஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது சத்துகள் நிறைந்த உணவுப்பொருளே அல்ல.

குறைந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பது மட்டும்தான் இதிலுள்ள ஒரே நன்மை.

corn flakes for breakfast

ஆகவே, விளம்பரங்களைப் பார்த்து உணவுப்பொருளை வாங்குவதற்குமுன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.

அது நமது உடல்நலத்துக்கு உகந்ததா? சத்தானப் பொருட்கள் இருக்கிறதா? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மக்காச்சோளம் சாப்பிட ஆசையாக இருந்தால் இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளத்தை வாங்கிச் சாப்பிடலாமே தவிர ஒருபோதும் கார்ன் ஃப்ளேக்ஸ் வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

அதேபோல் தினமும் குழந்தைகளுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைக்குச் சத்துக்கள் இல்லாத சக்கை உணவை தருகிறீர்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

blood sugar break fast calories carbohydrates cereal corn corn flakes diet digestion fatty liver disease featured food glycemic index Health nutrients processed food proteins sugra vitamins weight loss
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏவுகணைகளால் ஆங்கிலேய படைகளை திணறடித்த திப்பு சுல்தான் – ஆச்சர்யமூட்டும் வரலாற்று பதிவு
Next Article கால் தசைகளை பலப்படுத்தி கால்களை நீட்சியடைய செய்யும் சலபாசனம் – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
உணவு

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.