உணவு

சாமையை உண்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சாமையில் உள்ள சத்துகள்:

சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முக்கியமானவை.

 

சாமையின் மருத்துவ பலன்களில் சில:

மலச்சிக்கலைப் போக்குகிறது

வயிற்று உப்புசத்தை சரி செய்கிறது.

நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது.

இருதய நலனைப் பாதுகாக்கிறது.

ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.

அதிகக் கொழுப்பு சேராமல் தவிர்க்கிறது.

நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது.

அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

இரத்த சோகையைப் போக்குகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது.

கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது.

மாதவிடாய் கோளாறுகளைப் போக்குகிறது.

கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.

ஆண்மைக் குறைவை சரி செய்ய உதவுகிறது.

விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வயது முதிர்தலுக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுகிறது.

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்ட சாமையை சமைத்து உண்பதும் மிகவும் எளிது. சாமையில் உப்புமா, கிச்சடி, இட்லி என்று பல்வேறு சிற்றுண்டி வகைகளை சமைத்து உண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை நன்கு பேணலாம்.

 

Related posts