ஃபிட்னஸ்

கால் தசைகளை பலப்படுத்தி கால்களை நீட்சியடைய செய்யும் சலபாசனம் – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது.

சலபாசனம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. இதன் காரணமாக தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவை வளர்கிறது. பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறனும் வளர்கிறது.

salabhasana

சலபாசனத்தின் மேலும் சில பலன்கள் :

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது

முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது

கழுத்து முதல் கால் வரை பின் உடல் முழுவதையும் பலப்படுத்துகிறது

தோள் மற்றும் மார்புப் பகுதியை விரிக்கிறது

நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

தோற்றப்பாங்கை (Posture) சரி செய்கிறது

locust pose yoga

வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் செம்மையாக்குகிறது

கால்களை நீட்சியடையச் செய்கிறது

கால் தசைகளை உறுதியாக்குகிறது

முட்டியை வலுப்படுத்துகிறது

மன அழுத்தத்தைப் போக்குகிறது

மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது

செய்முறை :

விரிப்பில் கால்களை நீட்டியபடி குப்புறப்படுக்கவும்.

கைகள் உடம்பிற்கு அருகிலும் முகவாய் தரையிலும் இருக்க வேண்டும்.

மெதுவாக தலை, தோள் மற்றும் கால்களைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

கைகளையும் தரையிலிருந்து உயர்த்தவும்.

salabhasana yoga pose

 

நேராகப் பார்க்கவும்.

20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் உடலைத் தளர்த்தி ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு :

ஆரம்பப் பயிற்சியாளர்கள் முகவாயைத் தரையில் வைத்து கைவிரல்களை மடித்து உள்ளங்கைகளைத் தொடைக்கு அடியில் வைக்கலாம்.

Related posts