அரசியல்தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் – தமிழக அரசு உடன் பாஜக துணை நிற்கும் !

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக துணை நிற்கும் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை செய்தியாளர் சந்திப்பு

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பாஜகவிற்கு கிடையாது எனவும், தங்கள் கட்சியை வளர்க்கவே தாங்கள் பாடுபடுகின்றோம் எனவும் தெரிவித்தார். நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக பிரதான கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக தனித்து நிற்பதாகவும் கூறினார்.

Annamalai

அரசுக்கு பாஜக துணை

இதனை தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்தப் பலனும் இல்லை எனவும், அமைச்சர்கள் மாறினால் ஏதாவது பலன் கிடைக்கும் என அண்ணாமலை கூறினார்.

River

வழக்கை சந்திக்க தயார்

மேலும், மின்சார துறை குறித்து தான் பொய்யான தகவலை கூறி வருவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்’ என அவர் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

விசாரணை கைதி மரணம்

காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் மரணம் அடைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘காவல்துறை மீது பொதுமக்கள் அச்சமாக இருக்கின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் மரணம் தொடர்பான விவகாரத்தில் அப்போதைய எதிர் கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் அரசியல் நிகழ்வாக மாற்றினார். ஆனால் தற்போது லாக் அப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதுகுறித்து காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருப்பது ஏன் ? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திமுகவின் அரசியல் தலையீட்டை சரி செய்தாலே பாதி பிரச்சனை சரியாகி விடும் எனவும்’ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

Accused

Related posts