உணவு

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்!

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது.

கி.பி 1600களில்  அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு பயணப்பட்டது இந்த வெண்டைக்காய். இன்று உலகில் எல்லா நாடுகளிலும் கிடைக்கும் சாதாரணமான காய்கறியாக மாறியுள்ளது வெண்டைக்காய்.

இந்த வெண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

vendakkaai

வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.

உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க வேண்டுமென்றால் தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு வாருங்கள். உடம்பில் சேர்ந்துள்ள தேவய்யற்ற கொழுப்பை கரைக்கும் மருத்துவ ஆற்றல் வெண்டைக்காயில் உள்ளது.

வெண்டைக்காயில் உள்ள பெக்டின் எனப்படும் வேதிப்பொருள் வயிற்றில் ஏற்படும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தும்.

இந்த பெக்டின் எனும் வேதிப்பொருள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் மேல் தோலில் காணப்படும். இது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்தாகும் (Soluble Fiber).

இந்த நார்ச்சத்து, சீரம் கொலஸ்ட்ரால்(serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றது.

ladys finger

வெண்டைக்காயில் பாதிக்கு மேல் கரையக்கூடிய நார்ச்சத்து தான் இருக்கிறது. மறு பாதியில் Insoluble Fiber, அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார்சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.

வெண்டைக்காய் ஞாபக சக்தியினை அதிகரிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு கட்டாயம் வாரத்தில் 2முறை என்ற அளவில் கட்டாயம் செய்து கொடுத்தல் வேண்டும்.

50 வயதினை நெருங்கியவர்களும் மறதியால் அதிக அளவில் அவதிப்பட்டால் கட்டாயம் வெண்டைக்காயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஆஸ்த்மா போன்ற சுவாசக்கோளாறுகளை சீர் செய்வதிலும் வெண்டைக்காய்க்கு பெரும்பங்கு உள்ளது. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது.

கண்பார்வை கோளாறுகளை சரி செய்வதிலும் வெண்டக்காயின் பங்கு உள்ளது.வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கண்களில் ஏற்படும் நோய்களான கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்

உடலில் வீக்கமோ கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களை பசை போல அரைத்து கட்டிகளின் மீது வைத்து கட்டவும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து வேதனை தணியும்.

பிஞ்சு வெண்டைக்காயில் உள்ள வேதிச்சத்துகள் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மையுடையது. தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராது.

ladys finger roast

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. அதனால் உடலில் நீர் இழப்பை தடுத்து எப்போதும் குளுமையாக வைக்கிறது.

வெண்டைக்காய் நீர் :

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.

இவ்வாறு பருகி வந்தால், எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும்.

வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

ladys finger plant

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இதனால் வெண்டைக்காய் உண்பவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட உதவும்

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Related posts