கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி வன்குறையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கள்ளகுறிச்சி எஸ்.பி செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

