டிஜிபி உத்தரவு
காவல்துறை அதிகாரிகள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் போலீஸ் என்ற ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது என்று ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து காவலர்கள் தங்கள் தனிப்பட்ட உபயோகத்திற்காக வைத்துள்ள வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.
இதை காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மேலும், இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

