மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நாளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார் .
அமைச்சர் துரைமுருகன்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என காவிரி நீர் மேலாண்மை அணைய தலைவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்பதை குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நாளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க பேசயுள்ளார். காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் நீதிமன்றத்தில் மேகதாது தொடர்பாக வழக்கு இருப்பதால் விவாதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மேகதாது பற்றி விவாதித்தால் வெளிநடப்பு செய்யப்படும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

