சினிமாதமிழ்நாடு

‘முதலில் தமிழன் தமிழனை மதிக்க வேண்டும்’ – பார்த்திபன் உருக்கம் !

உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் எடுக்க கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்று நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல்

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியிருக்கிறது இரவின் நிழல். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இரவின் நிழல் வெளியான திரையரங்கு ஒன்றிற்கு நடிகர் பார்த்திபன் சென்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பார்த்திபன் பேச்சு

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், ‘தாய்மார்களுக்கு இரவின் நிழல் திரைப்படம் பிடித்துள்ளது. இந்த படத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறோம். 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் எடுக்க கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான்’ என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

Related posts