புதிய அப்டேட்
‘பழைய வண்ணாரப்பேட்டை’ ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் மோகன் ஜி. இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அந்த வகையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ராதாரவி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘பகாசூரன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sensational #Bakasuran is ready for the wild hunt.
Tamil Nadu Theatrical Release by SSI Production.
This November in theatres !!@mohandreamer @selvaraghavan @natty_nataraj @SamCSmusic @Subbiahshan @Theteamofflpic.twitter.com/enuvpwKOG9
— Ramesh Bala (@rameshlaus) September 15, 2022

