புதிய பாடல்
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ‘சொல்’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
As pleasing as it could get!
The Lyrical video of #Sol from #PS1 is out now!🎤 @rakshitasuresh
✍🏻 #KrithikaNelson#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @trishtrashers #SobhitaDhulipala pic.twitter.com/KsUaGHDaL4— Lyca Productions (@LycaProductions) September 16, 2022