அரசியல்தமிழ்நாடு

தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

மரியாதை

ஆண்டுதோறும் தந்தை பெரியாரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பெரியாரின் 144வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts