அரசியல்தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ஜனாதிபதி, அரசியல் கட்சி தலைவர்கள், பிற மாநிலங்களின் முதலமைச்சர்கள் என பலரும் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts