ரிலீஸ் தேதி
காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். அவர் தொடர்ந்து அறம், அப்பா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குழலி’. நடிகை ஆரா கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் செரா. கலையரசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், டி.எம். உதயகுமார் இசையமைக்க, ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘குழலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Award Winning Film #Kuzhali to release on September 23! 🎬👍🏼💐#Aara #Vignesh @Cherakalaioffl #MukkuziFilms @OorvasiJayaram @iamKarthikNetha @Music_UdhayDM@editorthiyagu @RIAZtheboss @V4umedia_ @zeemusicsouth pic.twitter.com/incVjX59hw
— Chera.Kalaiyarasan Director (@cherakalaioffl) September 11, 2022

