புதிய தகவல்
‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் தற்போது சூர்யா நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இப்படத்தில் ஹிந்தி நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் 10 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா இப்படத்தில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.