சினிமாவெள்ளித்திரை

என் பசிக்கு தீணி போடும் கதைகளை எதிர்பார்க்கிறேன் – நடிகர் சிம்பு!

கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருவதாக நடிகர் சிம்பு நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சித்தி இத்தானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியானது.

நேர்காணல்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிம்பு, ‘ஒரு நடிகராக நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால் கவனமாக கதைகளை தேர்வு செய்து வருகிறேன். நிறைய கதைகள் வருகிறது இருப்பினும் என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் கதைகளை மட்டுமே எதிர்பார்க்கிறேன்’ என்று பேசியுள்ளார்.

Related posts