மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரிகளுக்கு உபரி நீர்
திறந்துவிடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய பின்னர் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்ப கடந்த வருடம் பணிகள் நடைபெற்றது. ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. இதனையடுத்து இன்று காலை மேட்டூர் அணை நீர்வளத் துறை அதிகாரிகள் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி நீரேற்று நிலையத்துக்கு இருந்து இரண்டு ராட்சத மின்மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 25.2 கனஅடி தண்ணீர் தற்போது 100 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவைத்தனர்.
இந்நிலையில், திப்பம்பட்டி நீரேற்று நிலத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேச்சேரி அருகே உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு வந்தடைந்தது. அதனை நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார். இந்த ஏரி நிரம்பியது அடுத்து அருகில் உள்ள ராயப்பன் ஏரி, மானத்தாள் ஏரி மற்றும் தொளசம்பட்டி ஏரி உள்ளிட்ட 10 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

