விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஆக்ஸ்ட்11ம் தேதியில் இருந்து தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கோப்ரா படம்
டிமாண்டி காலனி படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், வரும் ஆக்ஸ்ட் 11ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கோப்ரா படத்திற்கான இறுதி கட்ட பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது ஆக்ஸ்ட் 11ம் தேதியில் இருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

