தென்காசியில் வன்முறைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த தனியார் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் ரமேஷ் கண்ணா. 27 வயதான இவர் வாட்ஸ்ஆப் ஆடியோவில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வாட்ஸ்ஆப் ஆடியோ
மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்தது போலவே தென்மாவட்டங்களிலும், அரசு சொத்துகளை சேதப்படுத்த வேண்டும் என்று வன்முறைகளை தூண்டும் வகையில் ரமேஷ் கண்ணா வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார். இதனால் சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் ரமேஷ் கண்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

