மதுரையில் மது அருந்த பணம் தராத கோபத்தில் இருவரை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருவர் கொலை
மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார். இவர் மது அருந்துவதற்காக கடந்த 11ம் தேதியன்று உத்தங்குடி பகுதியை சேர்ந்த இதயத்துல்லாவிடம் 30 ரூபாய் பணம் கேட்டு தர மறுத்த நிலையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அதற்கு அடுத்த மறுநாளே ஒத்தக்கடை பகுதியில் இருந்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பழனி (45) என்ற யாசகரிடம் மது அருந்த 50 ரூபாய் கேட்டு தர மறுத்த நிலையில் அவரையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை காவல்துறையினர் சதிஷ்குமாரை கைது செய்தனர். மது அருந்துவதற்காக பணம் கேட்டு தராததால் இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

