உலகம்சமூகம்சுற்றுசூழல்

2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு !

இத்தாலியில் 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போர் முடிந்து சுமார் 74 ஆண்டுகள் ஆகியுள்ளது. அனாலும் அதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டு வருகின்றது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வு, உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ‘போ’ ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது. இதனால் போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை கடந்த மாதம் 25ம் தேதி மீனவர் ஒருவர் கண்டு பிடித்தனர். அவர்கள் அந்நாட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வெடிகுண்டை மீட்ட அந்நாட்டு இராணுவம் மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர்.

Related posts