Editor's PicksSpecial Storiesஉலகம்

பிறந்த நாளை கொண்டாடும் பிரபல கார்ட்டூன் ஹீரோ!

கார்ட்டூன் ஹீரோ

1990-களில் பிரபல தொலைகாட்சி தொடரான மிஸ்டர் பீனில் நடித்தது மூலம் உலகளவில் பிரபலமானவர் ரோவன் செபாஸ்டின் அட்கின்சன். மிஸ்டர் பீன் தொடர் மொத்தமே 14 எபிஸோட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த 14 எபிஸோடுகளை மட்டுமே மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துள்ளோம். மேலும், இவர் 1983-ம் ஆண்டு வெளியான “Never Say Never Again” என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் நடித்திருந்தார். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 1955-ம் ஆண்டு பிறந்த ரோவன் அட்கின்சன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். உலக முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts