மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் காதலிக்க மறுத்ததால் கோபமடைந்த வாலிபர், அந்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் தீட்ஷித் 27வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே அதே கட்டிடத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணிடம் தனது காதலை சொல்லியிருக்கிறார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டால். ஆனால் தீட்ஷித் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தது மட்டுமின்றி தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி வந்திருக்கிறார். வாலிபரின் தொந்தரவை தாங்க முடியாத அந்த பெண் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறியிருக்கிறார். அதனால் ஏமாற்றம் அடைந்த தீட்ஷித் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். இருசக்கர வாகனம் அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் தீ வேகமாக அந்த கட்டிடத்துக்கும் பரவ தொடங்கியது.
சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தார்கள். இதனால் தீ பரவியது யாருக்கும் தெரியவில்லை. அதனால் அந்த கட்டிடத்துக்குள் இருந்த 7 பேர் உடல் கருகி உயிரிந்தனர். மற்றும் 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அதில் தீட்ஷித் தான் வாகனத்துக்கு தீ வைத்தார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பெரும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.