புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்தியில் திணிப்பு.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கென்று 50 ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின் இந்தி திணிப்பு என்பது பல கோணங்களில் நடந்து வருகிறது. அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்கள் கருத்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் கடைபிடிக்க வேண்டும். இந்தித்திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
நாட்டின் ஒரு பகுதியில் இருந்து வரும் மொழியை, ஒரு நாட்டின் பொது மொழியாக திணிப்பது பிற பகுதியில் வாழும் மக்களின் தாய்மொழியின் வளர்ச்சியை பாதிக்கும் செயல் ஆகும். மாநில மொழிகளோடு செயல்பட்டால்தான் நாட்டின் வளர்ச்சியும் ஒற்றுமையும் வரும்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ
இந்தித்திணிப்பு என்பது பல பண்மொழி, பண்பாடு, கலாசாரம் தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, ஒருமைப்பாடு உடைந்து இன்னொரு சோவியது யூனியன் போல மாறிவிடும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இந்திய என்பது பலதரப்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாடு. இந்தி என்னும் ஒரு மொழியை கொண்டு மற்ற இனங்களின் மொழிக்கு முக்கியத்துவம் தராது, ஹிந்தியை தேசிய மொழியாக நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகார செயல்படுவது
கண்டனத்துக்குரியது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
இந்தித்திணிப்பு கொள்கையை கைவிட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ், சுங்கக்கட்டணம், மருந்து விலை உயர்வு குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி கரிமேடு பகுதியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவலக மொழியாக இந்தி மட்டும் ஆங்கிலம் பயன்படுத்தபட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராஜேஷ் அகர்வால் இனி அலுவலக மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்து வருகின்றன.
முற்றுகை போராட்டம்
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்ததுக்கு, மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சினர் மருத்துவமனையை முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிவா மற்றும் உறுப்பினர்கள் சம்பத், செந்தில்குமார், ஜெனிபால் கென்னடி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேல்முருகன் கண்டனம்
இதுபோன்று, ஜிப்மர் மருத்துவமனையின் இந்தி திணிப்பு சுற்றறிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்கள் என்றும் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்தி திணிப்பு என அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
ராமதாஸ் வருத்தம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ‘சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணல் நடத்தப்படுகின்றன. அதனால் 95% வேலைவாய்ப்புகள் உள்ளுர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுவது வருத்தமளிக்கிறது .
ஒன்றிய அமைச்சர் எதிர் கருத்து
இன்று, இந்தி திணிப்பு குறித்து கருத்து கூறிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச வில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி மொழியை கற்று கொண்டு பேசினால் தவறில்லை என கூறியுள்ளார்.