திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி வருகிற 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழா
இதனை முன்னிட்டு கோவில் வண்ண மலர்கள் மற்றும் அரியவகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு முன்தினம் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஸ்வேஸ்வரர் மாட வீதிகளில் உலா வருகிறார்.
அதனைத்தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திருமலை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வருகிறார்.