ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கல்வித்துறை அமைச்சர் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆசிரியர்களின் குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகாத முறையிலும், ஒழுக்க கேடாகவும் நடந்து கொள்கின்றனர். ஆசிரியர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவது, அவர்களை தாக்குவது, மதியாமல் இருப்பது என சில மாணவர்களின் கொட்டம் அதிகரித்தது.
மாணவர்களின் அத்துமீறல்
கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாதனுர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவன் வகுப்பறையில் பாய் போட்டு படுத்துக்கொண்டிருந்தான். இதனை கண்டித்த ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டும் இல்லாமல் அடிக்கவும் முற்பட்டான். இதேபோல தேனி மாவட்டத்திலுள்ள சில அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களை மிரட்டுவதாக புகார் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் இதுபோன்று வெளிச்சத்திற்க்கு வராத அட்டகாசங்கள் பல உள்ளன.
மாற்றுச்சான்றிதழிலில் குறிப்பிடபடும்
இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில், இன்றைய சட்ட பேரவையில் இதற்கான நடவடிக்கையை பற்றி அமைச்சர் கூறினார். பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஒழுக்க கேடாக நடந்தால் அல்லது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் மாற்றுச்சான்றிதழிலும், conducts certificate லும் எந்த காரணத்துக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டு நிரந்தரமாக பள்ளியை விட்டு நீக்கப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
புதிய கல்வியாண்டில்
வரும் கல்வியாண்டில் போதனை வகுப்புகளுக்கு பிறகே பாடங்கள் நடத்தப்படும். இன்றைய மாணவர்களுக்கு கவன சிதறல்கள் அதிகம் ஏற்படுவதால் அதனை போக்குவதெற்கென சில சிறப்பு செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு கைபேசி எடுத்து வருவதும் முற்றிலும் கண்டிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.