இந்தியாதமிழ்நாடு

செயின் பறிப்பு கொள்ளையன் சாலை விபத்தில் மரணம் – கூட்டாளி அதிர்ச்சி தகவல் !

கன்னியாகுமரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் திருவனந்தபுரம் சாலை விபத்தில் மரணம்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்த பிரேமிகா (35). இவர் நாகர்கோவில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று பணிமுடித்துவிட்டு வழக்கம்போல அழகியமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரேமிகாவின் இருசக்கர வாகனத்தை இரு நபர்கள் வழி மறித்துள்ளனர்.


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவன் இறங்கி வந்து பிரேமிகா கழுத்தில் இருந்த பத்து சவரன் தங்க நகையை பறித்துவிட்டு சென்றான். இது குறித்து தக்கலை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை விபத்து

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருமாமூடு பகுதியில் இரண்டு இளைஞர்கள் சாலை நடுவில் உள்ள டிவைடரில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவர்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரது பாக்கெட்டிலிருந்து இருந்த பத்து சவரன் தங்க நகை இருப்பதை பார்த்த போலீசார் அவனிடம் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியை சேர்ந்த சஜாதுஹான் (17) என்பது காயமடைந்தவர் கோட்டையம் ராமபுரத்தை சேர்ந்த அமல்(21) என்பதும் குமரி மாவட்டத்தில் அழகியமண்டபத்தில் செயின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தமிழகத்தில் தொடர் திருட்டு

இது குறித்து கேரள போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடம்பர இருசக்கர வாகனகளில் நண்பர்களுடன் இணைந்து கேரளாவில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும். இறந்த சஜாதுஹான் மூன்று தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவர்களில் யார் போலீசில் சிக்கினாலும் திருட்டில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவர்களுக்காக சில வழக்கறிஞர்கள் மூலம் அவர்களை ஜாமினில் எடுப்பதும் தெரியவந்துள்ளது.  இவர்களை பலவழக்கில் குமரி காவல் துறைனர் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts