தாய்லாந்தில் 72 முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் சடலத்தோடு 21 வருடங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்.
மனைவியின் மரணம்
தாய்லாந்தில் பாங்காக் நகரில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சார் ஜன்வாட்ச்கல் என்பவரின் மனைவி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளை அனுரிசம் ஏற்பட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். இறந்த மனைவியின் உடலை ஜன்வாட்ச்கல் அடக்கமோ தகனமோ செய்யவில்லை. மாறாக சடலத்தை சவப்பெட்டியுனுள் வைத்து 21 ஆண்டுகள் தன் வீட்டிலேயே வைத்துள்ளார்.
உடல் அடக்கம்
21 வருடங்கள் கழித்து தன் மனைவியிடம் இருந்து விடை பெற நினைத்த ஜன்வாட்ச்கல் கடந்த 30 ஆம் தேதி தனது மனைவியின் உடலை அடக்கம் செய்திருக்கிறார். இதனை முடிவில்லாத அன்பின் அடையாளமாக ஜன்வாட்ச்கல் கருதுகிறார். சவப்பெட்டியை வீட்டில் இருந்து வெளியே எடுத்துவரும் அறக்கட்டளை ஊழியர்களுக்கு உதவியும் இருக்கிறார்.
ஜன்வாட்ச்கல் கதறல்
உடலை அடக்கம் செய்யும் கடைசி நேரத்தில் ‘அம்மா நீ என்னை ஒரு சிறு வேலையாகத்தான் விட்டு செல்கிறாய். நீ சீக்கிரம் வீட்டிற்கு திரும்புவாய், இது நீண்ட காலம் செல்லாது இது சத்தியம்’ என்று கதறி அழுதிருக்கிறார். எங்கு தன் மனைவியின் உடலை அடக்கம் செய்யாமல் இறந்துவிடுவோமோ என எண்ணி ஜன்வாட்ச்கல் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் தனது மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளார்.
அன்பில் சிறந்த கணவர்
எத்தனையோ கணவர்கள் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மீது அன்பு செலுத்தாமல் அவர்களை வெறுத்து , உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அத்தகைய கணவர்கள் மத்தியில் அன்பில் வென்ற சிறந்த கணவராக ஜன்வாட்ச்கல் விளங்குகிறார்.