ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் குலுகுலு படத்தின் முதல் பாடல் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சிங்கள்
மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குலுகுலு. முழுக்கமுழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#MaatnaGaali ft @Music_Santhosh from #GuluGulu releasing tomorrow at 5️⃣PM! 🔥🤩#GuluGuluFromJuly29 @iamsanthanam @MrRathna @circleboxE @RedGiantMovies_ @KVijayKartik @rajnarayanan_ pic.twitter.com/phg8RknC8m
— Sony Music South (@SonyMusicSouth) July 18, 2022

