செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் சாணி காயிதம். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் நேற்று வெளியானது.
இயக்குனர் செல்வராகவன் இரண்டாவது படமான பீஸ்ட் படம் முன்பே ரிலீசாகி விட்ட நிலையில் அவர் நடிகராக அறிமுகமான முதல் படமான சாணி காயிதம் நேற்று வெளியானது. ராக்கி படம் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் இது. மே 6 ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.
கதை சுருக்கம்
மேல்சாதியினருக்கும் கீழ்சாதியினருக்கும் ஏற்படும் பிரச்சனையில் கீர்த்தி சுரேஷின் குடும்பத்தை எரித்து கொள்கிறார்கள். தன் குடும்பத்தை கொன்றவர்களை எப்படி பழிவாங்கினாரா கீர்த்தி சுரேஷ் என்பதே மீதி கதை.
பழைய கதை
தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் பழைய பழிவாங்கும் கதை தான். இருந்தாலும் அதை திரைக்கதையில் 6 பாகங்களாக பிரித்து தனி தனியாக சொன்ன விதம் விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்களில் செல்வராகவன் யார் என்ற கேள்வியுடன் திரைக்கதை நகர்கிறது. பின்பு அதை சொல்லும் விதம் அருமை. பழிவாங்குவாதற்கு செல்வராகவன் சொல்லும் கதை வேண்டுமென்றே வைக்கப்பட்டது போல் உள்ளது.
குழந்தைகள் பார்க்கக்கூடாது
பழிவாங்கும் படம் என்பதற்காக படத்தில் கடைசி வரை கொடூரமான ரத்தக் காட்சிகள் நிறைந்துள்ளது. படம் முழுக்க முகம் சுளிக்கும் ரத்தக் காட்சிகள், கத்திக்குத்து போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் குடும்பங்கள், குழந்தைகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஏமாற்றம்
படத்தின் ஆரம்ப காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், பின்பு வரும் காட்சிகள் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கலக்கிய நடிகர்கள்
இது தான் செல்வராகவனின் முதல் படம் என்றாலும் நடிப்பில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக கீர்த்தி சுரேஷ் வீடு எரியும் காட்சியில், அவர் கதறி அழுகும் காட்சி பார்வையாளர்களை கலங்க வைக்கும். கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல் தன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.