சினிமாவெள்ளித்திரை

தனுஷுடன் ஜோடிசேரும் பிரபல கதாநாயகி!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் படக்ங்கள்

தனுஷ் நடித்துள்ள ஆங்கில படமான ‘தி கிரே மேன்’ அடுத்த மாதம் 22ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படமும் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Gray Man

புதிய படம்

தற்போது தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படம் 1930-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

புதிய கதாநாயகி

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பிரியங்கா மோகன் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறதாம். இதனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக இத்திரைப்படத்தில் இருந்து பிரியங்கா மோகன் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கதாபாத்திரத்தில் தற்போது கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhanush, Priyanka

கிருத்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பெனா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகிவரும் தி வாரியர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்திலும் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படங்களின் பணிகளை முடித்துவிட்டு கீர்த்தி ஷெட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts