சினிமா

தனுஷ் பிறந்த நாளையொட்டி வெளியாகும் இரண்டு படங்கள்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் தனுஷ் பிறந்த நாளையொட்டி வரும் ஜூலை மாதம் அவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்ததடுத்து வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘மாறன்’. படம் பிரபல ஒடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனகளை பெற்றது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Thiruchitrambalam - Dhanush 44 Title Revealed | Raashi Khanna, Nithya Menon, Priya Bhavani Shankar - YouTube

தனுஷின் லைன் அப்

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். அதனைதொடர்ந்து, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பிறகு ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’ என்ற படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் நடிகர் தனுஷ்.

ஜூலை விருந்து

இந்நிலையில், கடந்த  ஆகஸ்ட் 21ம் தேதி பூஜையுடன் தொடங்கிய படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும், அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி வெளியிடுகிறார். வரும் ஜூலை மாதம் 1ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhanush with Avengers hero and director

பர்த்டே ட்ரீட்

இதனையடுத்து தனுஷ் நடித்திருக்கும் ஆங்கில படம் ‘தி க்ரே மேன்’. ரூஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு  இருக்கிறது. இந்நிலையில் இந்த படமும் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஜூலை மாதம் 28ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்த நாள். இந்நிலையில் தனுஷின்  ‘திருச்சிற்றம்பலம்’, ‘தி க்ரே மேன்’ ஆகிய படங்கள் அடுத்ததடுத்து திரைக்கு வரவிருப்பதால் அவரின் ரசிகர்கள் கொண்டடி வருகிறார்கள்.

 

Related posts