தி லெஜண்ட் படத்தை சட்ட விரோதமாக வெளியிட இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி லெஜண்ட் படம்
பிரபல தொழிலதிபர் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தி லெஜண்ட். ஜேடி- ஜெர்ரி இயக்கியுள்ள இப்படம் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஊர்வசி, நாசர், பிரபு, விவேக், கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நாளை திரையரங்கில் வெளியாகிறது.
சட்டவிரோத வெளியிடு
இந்நிலையில், தி லெஜண்ட் படத்தை அரசு மற்றும் தனியார் இணையதளம் மூலமாக சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, 1,262 இணையதளங்களுக்கும் மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் தி லெஜண்ட் படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

