ஃபர்ஸ்ட் சிங்கிள்
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. மேலும், நடிகர் ஷாருக்கான் ‘பதான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க, நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். இதனிடையே நடிகர் ஷாருக்கான் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ‘பதான்’ படத்தின் ‘அழையா மழை’ எனும் முதல் பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.