சினிமாவெள்ளித்திரை

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவரது ரசிகர்களும் பல்வேறு விதமாக பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் வெளியானது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க என்றும் உங்கள் ரசிகன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts