சினிமாவெள்ளித்திரை

முனுமுனுக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட பாடல்!

இரண்டாவது பாடல்

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை அடுத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘ஃபர்ஹானா’ படத்தின் ‘சாரா’ எனும் இரண்டாவது பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகள் ரசிகர்களை முனுமுனுக்க வைத்துள்ளது.

Related posts