உலகம்சினிமாவெள்ளித்திரை

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம்!

ஆர்ஆர்ஆர் படம்

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இரண்டுப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழா 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts