சினிமாவெள்ளித்திரை

ஜீ.வி.பிரகாஷுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை!

பிரபல நடிகை

‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் ஆனந்த் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இதன்முலம் ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts