மீண்டும் பொருட்காட்சி
சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் பொருட்காட்சி என்பதால் இதனை சிறப்பாக நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சென்னையில் தொடர் மழையின் காரணமாக பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வருகிற 28-ம் தேதிக்குள் பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.