பிரபல நடிகை
சூர்யா நடிப்பில், 2002-ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுமானவர் நடிகை திரிஷா. அதனைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’ ‘வின்னைதாண்டி வருவாயா’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களிடயே பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை திரிஷா திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி வாழ்த்திய தனது ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.