இந்தியாசினிமா

நீண்ட நாள் கனவை நனவாக்கிய பிரபல நடிகை!

பிரபல நடிகை

ஜீவா நடிப்பில், கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

புதுவீடு

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், எவ்வளவு மன உளைச்சலோடு இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அது எல்லாம் பறந்து போக வேண்டும். இதற்காக மும்பையில் புதுவீடு ஒன்றை வாங்கி அதை எனக்கு ஏற்றபடி மாற்றியுள்ளேன். இது மூலமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது’ இவ்வாறு நடிகை பூஜா ஹெக்டே கூறினார்.

Related posts