சினிமாவெள்ளித்திரை

3 மில்லியன் பார்வைகளை கடந்த சிரஞ்சீவி பாடல்!

3 மில்லியன்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் 154-வது திரைப்படமாக ‘வால்டேர் வீரய்யா’ உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க, ரவிதேஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. இதனிடையே இந்த படத்தின் டைட்டில் பாடல் நேற்று வெளியானது.

இந்நிலையில், இந்த டைட்டில் பாடல் நேற்று ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Related posts